துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: டெல்லியில் பேரிடர் பாதிப்பை குறைப்பதற்கான தேசிய கட்டமைப்பின் 3வது அமர்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, பேரிடர் மேலாண்மையை மனதில் கொண்டு புதிய வழிகாட்டுதல் உருவாக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும். துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. தொழில்நுட்பத் திறனை இந்தியா அதிகரித்துள்ளது பேரிடர்களில் பலரின் உயிரை காப்பாற்ற உதவியது. இளைஞர்களுக்கு ராணுவ வீரர்களுடன் இணைந்து பேரிடர் மேலாண்மையில் திறம்பட பயிற்சியளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: