தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் ஆய்வு நடத்தி வருகிறார். 1992ல் சந்தன கட்டைகளை பதுக்கியதாக பழங்குடியினர் மீது போலீஸ் வருவாய்த்துறை, வனத்துறையினர் தாக்குதல் நடத்தினர். பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பல பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 1996ல் சிபிஐ விசாரித்தது. 2011ல் உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related Stories: