காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர்களுக்கு அறிவியல் கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறை இணைந்து, தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘இளைஞர்களுக்கு அறிவியலின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், துணை முதல்வர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தாளாளர் அரங்கநாதன், தலைவர் சாய்ராம், செயலாளர் மாதவன், பொருளாளர் பிரதீப்குமார் மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த கருத்தரங்கில், மேனாள் விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி நெல்லை சு.முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘இளைஞர்களுக்கு அறிவியலின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகனை தயாரிப்பில் அறிவியல் டாக்டர் கலாம் சந்திப்பு, வருங்கால வாழ்க்கை சூழ்நிலையில் அறிவியலின் முன்னேற்றம், வளர்ச்சி சாதனைகள் பற்றி ஒளித்திரையின் மூலம் விளக்கி பேசியதுடன், அவர்தம் எழுதிய ‘அறியப்படாத அறிவியல் ஆளுமைகள்’ எனும் புத்தகத்தை கல்லூரி முதல்வரிடம் வழங்கி நூலினை வெளியிட்டார்.

Related Stories: