திருப்பதியில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் நல விடுதியில் கூடுதல் மாவட்ட நீதிபதி திடீர் ஆய்வு

*அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார்

திருப்பதி :  திருப்பதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் நல விடுதியில் கூடுதல் மாவட்ட நீதிபதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார்.

திருப்பதி நீதிமன்ற 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட நியாய சேவை அமைப்பின் தலைவர் நீதிபதி வீரராஜு, சென்னா ரெட்டி காலனியில் உள்ள ஆந்திர மாநில அரசின் சமூக நலத்துறை ஒருங்கிணைந்த ஆண்கள் பள்ளி மாணவர்ள் விடுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆந்திரப் பிரதேச மாநில சட்டப் பணி ஆணைய உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை சரிபார்த்து, சுற்றுப்புறத்தின் தூய்மை மற்றும் மருத்துவ வசதிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மாநில அரசு ஏழை எளிய மாணவர்கள் நன்றாக படித்து சமூகத்தில் சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து தரப்பு மக்களும் உயர்நிலைக்கு அடைய வேண்டும் என்பதற்காக சமூகநலத்துறை சார்பில்  அனைத்து வசதிகளுடன் கூடிய விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு தங்கி உள்ள மாணவர்களுக்கு தரமான உணவு குடிநீர், காற்று வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் சிறந்த முறையில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சிறப்பாக படித்து சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்.

Related Stories: