ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள அக்ரஹாரம் தெருவில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நேற்று புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் சுமார் 20 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அப்போது ஆழ்துளை கிணற்றில் மண் பகுதியில் ஏதோ ெபாருள் சிக்குவதுபோன்று தொழிலாளர்கள் உணர்ந்தனர். இதையடுத்து அந்த பொருளை வெளியே எடுத்து பார்த்தபோது, ஐம்பொன்னாலான அம்மன் சிலை என தெரியவந்தது.

பழங்காலத்தை சேர்ந்த அந்த சிலையின் கைகள் சேதமடைந்திருந்தன. மேலும் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் குணசேகரன், வினோத் மற்றும் போலீசார் அங்கு சென்று சிலையை மீட்டு தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர். அந்த சிலை இன்று(27ம் தேதி) லால்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: