ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்... காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள  செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்,அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

* ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கலைமகள் பள்ளியில் காலை 7 மணிக்கே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்களித்தார்.

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிடும் ஆனந்த் வாக்களித்தார். கருங்கல்பாளையம் காவல் நிலையம் அருகே அக்ரஹாரம் மஜீத் வீதியில் உள்ள மதரசா பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ஆனந்த். முன்னதாக வாக்குச்சாவடிக்கு கட்சி துண்டு, கரை வேட்டியுடன் வந்த அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

* அதிமுக வேட்பாளர் தென்னரசு கருங்கல்பாளையத்தில் உள்ள அக்ரஹாரம் கல்லு பிள்ளையார் கோவில் தெருவில் மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தேமுதிக வேட்பாளரை தொடர்ந்து, வாக்குச்சாவடிக்கு கட்சி துண்டு, கரை வேட்டியுடன் வந்த அவருக்கும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

* ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன். வெற்றி பெற முடியாது என்பதால் மை அழிவதாக எதிர்க்கட்சியினர் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.எதிர்க்கட்சியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்,என்றார்.

Related Stories: