விருத்தாசலம் கோயிலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு சிறப்பு பூஜை

விருத்தாசலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு இன்று (27ம் தேதி) நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் எடப்பாடி ஆதரவாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரசாரம் ேநற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது, தேர்தலில் வெற்றிபெற வேண்டி, சிறப்பு பூஜை செய்து, வழிபட்டார். இதன் பின்னர் அவர் ஈரோடுக்கு புறப்பட்டு சென்றார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோயிலாகும். காசியை விட விருத்தகாசிக்கு வீசம் அதிகம் என்பது ஐதீகம் ஆகும்.

Related Stories: