வருசநாடு அருகே பண்டாரவூத்தில் தார்ச்சாலை வசதியின்றி தடுமாறும் மலைக்கிராம மக்கள்: 60 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுமா?

வருசநாடு: கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பெண்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனால், மலைக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மலைக்கிராமங்களில் சாலைகளை பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், அப்பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும்குழியுமாக உள்ளது. திமுக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மலைக்கிராம மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மலைக்கிராம குடியிருப்பு கட்டிட பணிகள், சாலை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

வருசநாடு அருகே சிங்கரா ஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 60 ஆண்டு காலமாக இந்த கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி இல்லை. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் பரிதவித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் டூவீலரில் செல்வோர் பரவி கிடக்கு்ம ஜல்லிக்கற்களால் பரிதவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சாலை வசதி இன்று வரையும் செய்து கொடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சிங்கராஜபுரம் ஊராட்சி கிராமவாசி சின்னன் கூறுகையில், ‘‘ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 3கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கராஜபுரம் கிராமத்திற்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் ஆட்டோக்களில் செல்ல வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் கொடுத்து, பாதி தூரம் நடந்து செல்லும் நிலையும் உள்ளது. எனவே, எங்கள் கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: