தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது.  காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும் மதியம் 2 முதல் 5 மணி வரை பொது தேர்வும் நடைபெறும்.1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுத உள்ளனர். 5,446 பணியிடங்களு 27,306 ஆண்கள், 27,764 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும் மதியம் 2 முதல் 5 மணி வரை பொது தேர்வும் நடைபெறுகிறது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழக அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வுகள் ஒவ்வொரு நிலையிலான பணிக்கும் ஒவ்வொரு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

கிளார்க், விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2, 2ஏ தேர்வுகள், குரூப் 1 உள்ளிட்டவை உயர் பதவிகளுக்கு நடத்தப்பபடுகிறது. இதில் அரசு போடும் தகுதி, விதிகளின் அடிப்படையில் யாருக்கெல்லாம் பொருந்துகிறதோ அவர்கள் தேர்வை எழுதலாம். இந்த தேர்வை 10 லட்சம் பேர் முதல் நிலை தேர்வை எழுதினர். அவர்களில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் 58 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை தேர்வை எழுதுகிறார்கள்.

Related Stories: