ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பழனிசாமியின் 2-ம் கட்ட பிரச்சாரத்திற்கு வெளிமாவட்ட ஆட்களை அதிமுகவினர் வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக புகார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுகவினர் வெளிமாவட்ட ஆட்களை அழைத்து வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பழனிசாமியின் 2-ம் கட்ட பிரச்சாரத்திற்கு வெளி மாவட்ட ஆட்களை அதிமுகவினர் வாகனத்தில் ஏற்றி வந்ததாக புகார் எழுந்திருக்கிறது. பிரச்சாரத்திற்காக சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோரை வாகனத்தின் ஏற்றிச் சென்றனர். பிரச்சாரத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் தட்டுகளையும் அதிமுகவினர் பரிசுப் பொருளாக வழங்கியதாக புகார் எழுந்ததுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பிரசாரத்தில் நாளை மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இறுதிகட்ட பிரச்சாரம் என்பது தற்போது சூடுபிடித்திருக்கிறது. தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவர் முதற்கட்ட பிரச்சாரத்தை  பிப். 13, 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதி என மூன்று நாட்களாக மேற்கொண்ட போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை வேட்பாளர் வாக்காளர்கள் பெருமளவில் ஆதரவு தரவில்லை என ஒரு புகார் எழுந்தது.

இந்த நிலையில் தான் அவர் தற்போது 2-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். குறிப்பாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பிரச்சாரம் ஆகும். அதன் காரணமாக இந்த பிரசாரத்தில் பெருமளவில் மக்களை காட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.  பிரச்சாரத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் தட்டுகளையும் அதிமுகவினர் பரிசுப் பொருளாக வழங்கியதாக புகார் எழுந்ததுள்ளது.

பிரச்சாரத்திற்காக சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோரை வாகனத்தின் ஏற்றிச் சென்றனர். பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தட்டில் உள்ள பூக்களை தூவும் வகையில் மக்களை தயார்படுத்தியுள்ளனர். இறுதிகட்ட பிரச்சாரமாக இன்றும் நாளையும் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். பிரச்சாரத்தில் மக்கள் கூட்டம் இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து பழனிசாமி தரப்பில் ஆட்களை அழைத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: