விழாக்களால் கேந்திப் பூ விலை உயர்வு: திருவில்லிபுத்தூரில் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் விழாக்களால் கேந்திப் பூ கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பிராதானமாக தென்னை, நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பூவானி விளக்கு, பிள்ளையார்நத்தம் பகுதியில் விவசாயிகள் தங்களுடைய ஏக்கரில் கேந்தி, சம்பந்தி, முல்லை உள்ளிட்ட விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கேந்தி பூ சீசன் என்பதால் தற்போது விவசாயிகள் அதிகளவு கேந்தி பூ விவசாயம் செய்து வருகின்றனர். மஹாசிவராத்திரி, சனிப்பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட விழாக்கள் வருவதால் பூக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கேந்தி பூ வியாபாரிகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கேந்தி பூ அதன் தகுதிக்கு ஏற்ப கிலோ 100 ரூபாய்க்கு வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: