இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது : தமிழக அரசு

சென்னை : இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது என்று உணவுப்பொருள் வழங்கல்துறை சற்றுமுன் உத்தரவை பிறப்பித்துள்ளது.

உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,,

*இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது

*அரசின் வேட்டி, சேலைகள் POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்படவேண்டும்

*ரேஷன் கடைகளில் எக்காரணத்தை கொண்டும் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்கக் கூடாது.

 *பணி நாட்களில் ரேஷன் கடைகளை காலை 9 மணிக்கே திறந்து பொருட்களை விநியோகிக்கவேண்டும்

*ஒரே நபர் வெளிமாவட்டம், மாநிலங்களில் ரேஷன் அட்டை வைத்துள்ளனரா என கள ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.

*ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்க ரேஷன் அட்டைதாரர்களிடம் அறிவுறுத்த வேண்டும்

 *திறக்கப்படாத கடைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: