நிலப் பிரச்னை ஏதும் இல்லை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு நிதி தான் பிரச்னை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த ஆட்சியில் எய்ம்சுக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதே 200 ஏக்கர் நிலம் அவர்களுக்கு தரப்பட்டு விட்டது. மேலும் கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்டிருந்தார்கள். அதுவும் 22.49 ஏக்கர் நிலம் உடனடியாக கொடுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் சொல்லியிருப்பது போல் கடந்த அதிமுக அரசில் கூட நிலம் கொடுப்பதில் தாமதம் இருந்தது என்று சொல்லக்கூடிய கூற்று ஏற்கத்தக்கது அல்ல. 222.47 ஏக்கர் நிலம் அன்றைக்கு அவர்களுக்கு தரப்பட்டு விட்டது.

அந்த நிலத்தை தற்பொழுது சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். எனவே நிலம் பிரச்னை தற்பொழுது இல்லை. நிதிப் பிரச்னைதான் இருக்கிறது. 2024ம் ஆண்டு  இறுதியில்தான் பணிகளை தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028ம் ஆண்டு தான் பணிகள் முடிவடையும் என்று கூறியுள்ளனர். இதுதான் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை சம்பந்தமான உண்மை நிலவரம். எனவே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று சொன்னது 2024 ஏப்ரல் இறுதியில் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: