தேச வளர்ச்சியில் பங்களிக்க தகுதி பெற்று இருக்க வேண்டும்: முதன்மை ஆணையர் ரவிசந்திரன் பேச்சு

சென்னை: தேச வளர்ச்சியில் பங்களிக்க தகுதி பெற்று இருக்க வேண்டும் என்று முதன்மை ஆணையர் ரவிசந்திரன் பேசினார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட நிகழ்ச்சி வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர் ரவிசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துக்கொண்டு ‘‘அரசு ஊழியர்கள் நிர்வாகத்தில் தார்மீக பொறுப்புகளுடன் நடந்துக்கொள்வது’’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வருமான வரித்துறை அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை ஆணையர் ரவிசந்திரன் கூறியிருப்பதாவது: தேசத்தின் வளர்ச்சியில் பங்களிக்க ஒவ்வொருவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தகுதி பெற்று இருக்க வேண்டும். வேத காலம் முன்பு இருந்தே தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசுகையில்: ஒரு மனிதன் தனக்கு எது நடக்கக்கூடாது என நினைக்கிறானோ அதனை மற்றவர்களுக்கும் (அவன் அல்லது அவள்) செய்யக்கூடாது. தேசத்தின் வளர்ச்சியில் வருமான வரித்துறை மிகப்பெரிய பங்களிக்கிறது. அதிகாரிகள் தர்மத்தையும், நன்மதிப்புகளையும்  பின்பற்ற வேண்டும். எல்லோரும் மனதளவில்  உறுதியுடன், கற்பனை திறனுடன் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில்  ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: