அலாஸ்கா கடற்கரை பகுதியில் வானில் பறந்த மர்மபொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க போர் விமானம்: எல்லையில் பதற்றம்..!

வாஷிங்டன்: அலாஸ்கா கடற்கரை பகுதியில் வானில் பறந்த மர்மபொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் முற்றிலும் ராணுவ கண்காணிப்பில் இருக்கும் மொன்டானா அணுசக்தி ஏவுதளத்தின் மேல் பகுதியில் மர்ம பலூன் பறப்பதை ரேடார்களின் மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே போல, லத்தீன் அமெரிக்கா பகுதியிலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. முதலில் வெள்ளை நிறத்தில் ஏதோ பறக்கிறது என்று மட்டுமே தெரிவித்த ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்த போது, சென்சார்கள் மற்றும் கேமரா பொருத்திய ஹீலியம் பலூன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவை அனைத்தும் பலூனில் பொருத்தப்பட்டிருந்த பெரிய ராட்சதசோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கிக் கொண்டிருந்தன. இறுதியில் அந்த பலூன் சீனத் தயாரிப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளையும் உளவு பார்க்க சீனா உளவு பலூன்களை அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே மோதல் நீடித்து வருகிறது. தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் விழுந்த அந்த பலூனின் பாகங்களை கைப்பற்றிய அமெரிக்கா பலூன் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், சீன உளவு பலூனை தொடர்ந்து 2-வது சம்பவம் நடந்துள்ளது. அலாஸ்கா கடற்கரை பகுதியில் வானில் பறந்த மர்மபொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் போர் விமானத்தில் சென்ற ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மர்ம பொருளின் சிதைந்த பாகங்கள் அலாஸ்காவின் உறைந்த ஆற்றுப்படுகையில் விழுந்துள்ளது. அந்த மர்ம பொருளின் பாகங்களை கண்டுபிடித்து அது எங்கிருந்து வந்தது. மர்ம பொருளை யார் அனுப்பியது, அதன் நோக்கம் என்ன? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: