மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து

மதுரை: மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் ரயில்கள் போக்குவரத்தில் வருகிற 15ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம், மதுரை-திண்டுக்கல், நெல்லை-ஜாம் நகர், நெல்லை-காந்திதாம், நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் வருகிற 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தேனியில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு வரும் மதுரை பயணிகள் ரயில், 15ம் தேதி ரத்து செய்யப்படும்.

மதுரை-திருவனந்தபுரம் (அமிர்தா), மதுரை-கோவை, மதுரை-விழுப்புரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற 15ம் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும். நாகர்கோவில்-கோவை, மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் விருதுநகரில் இருந்து இயக்கப்படும். மதுரை-எழும்பூர் (தேஜாஸ்) எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கங்களிலும் வியாழன் தவிர மற்ற நாட்களில் திருச்சியில் இருந்து இயக்கப்படும். கச்சிகுடா-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 11ம் தேதி திண்டுக்கல் வரை இயக்கப்படும்.

மதுரையில் இருந்து 12ம் தேதி புறப்பட வேண்டிய கச்சிகுடா எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும். மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு வரை இயக்கப்படும். பனாரஸ்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வருகிற 12ம் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும். ராமேசுவரத்தில் இருந்து வருகிற 15ம் தேதி புறப்பட வேண்டிய பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும். செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும். கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 16ம் தேதி வரை விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக செல்லும்.

ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வருகிற 15ம் தேதி வரை மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும். கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 11ம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும். நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் வருகிற 11ம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். ஜம்மு காஷ்மீரில் இருந்து இன்று புறப்படும் வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரையில் நிற்கும்.

கச்சிகுடாவில் இருந்து வருகிற 12ம் தேதி நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும். தேனியில் இருந்து தினந்தோறும் இரவு 6.15 மணிக்கு புறப்படும் ரயில் வருகிற 14ம் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டு வரும். திருச்சியில் இருந்து வரும் பயணிகள் ரயில், வருகிற 15ம் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக மானாமதுரைக்கு வரும். இந்த தகவலை மதுரை கோட்ட ரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Related Stories: