இந்தியாவிலேயே முதல் முறை திருநம்பிக்கு குழந்தை பிறந்தது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் சகத். திருநங்கையான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார்.  இதே கோழிக்கோட்டை சேர்ந்தவர் சியா. திருநம்பியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.  கடந்த வருடம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.   

சியா மூலம் சகத் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் நேற்று கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசேரியன் மூலம் சகத்துக்கு குழந்தை பிறந்தது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முதலாக குழந்தை பெற்றவர் என்ற பெருமை திருநம்பியான சகத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால் இவர்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Related Stories: