அதானி குழுமத்தில் முதலீடு ரூ.4லட்சம் கோடி நிறுத்தம்: பிரான்ஸ் நிறுவனம் அதிரடி

புதுடெல்லி: ஹிண்டன்பெர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தில் செய்ய வேண்டிய ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை பிரான்ஸ் குழுமம் நிறுத்தி வைத்துள்ளது. அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் அறிக்கை காரணமாக பெரும் சரிவை சந்தித்து உள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் எண்ணெய் நிறுவனமான டோட்டல் எனர்ஜி நிறுவனம் ஹைட்ரஜன் திட்டத்தில் ரூ. 4 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.  

அதானி குழுமத்தில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு செய்யும் நிறுவனமும் டோட்டல் குழுமம் தான். தற்போது ஹிண்டன்பெர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்வதை நிறுத்தி வைப்பதாக டோட்டல் எனர்ஜி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பேட்ரிக் தெரிவித்து உள்ளார்.

Related Stories: