மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தை சீரமைக்க வேண்டும்-பக்தர்கள் கோரிக்கை

மேல்மலையனூர் :   விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் மாதந்தோறும் அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்டு அம்மன் அருளை பெற்று செல்வர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாசி பெருவிழா எதிர்வரும் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மேலும் மயானக் கொள்ளை, தீமிதி, திருத்தேர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற உள்ள நிலையில் மாசி பெருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அதிக அளவு அக்னி குளத்தை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. தற்போது அக்னிகுளம் பழைய துணிகளால் நிரம்பி தூய்மையற்ற நிலையில் உள்ளது.

இச்சூழலால் குளத்திற்கு நீராட வரும் பக்தர்கள் பழைய துணி கழிவுகளில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.ஏற்கனவே இக்குளத்தில் கழிவுகளில் சிக்க பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தகைய சூழவில் பக்தர்களால் அதிகளவு பயன்பாட்டில் உள்ள அக்னி குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி குளத்தை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேல்மலையனூர் ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள அக்னி குளத்தை தூய்மைபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள

வேண்டும். அல்லது கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் நலன் கருதி இக்குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: