வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25%ல் இருந்து 6.50% ஆக உயர்வு!!

மும்பை : நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6வது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி விகித உயர்வை அடுத்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பு உள்ளது. முன்னதாக கடன் வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25%ல் இருந்து 6.50% ஆக உயர்த்தப்படுகிறது.பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.,என்றார்.

Related Stories: