நர்ஸ் பற்றிய சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா

ஐதராபாத்: நர்ஸ் ஒருவர் பற்றி சர்ச்சைக்குரிய ஆபாச கருத்தை சொன்னதற்காக பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார்.அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் அதுபோல் நடந்து கொள்வதும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வழக்கம். சமீபத்தில் நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரை தரக்குறைவாக அவர் விமர்சித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடிடிக்காக நிகழ்ச்சி ஒன்றை பாலகிருஷ்ணா தொகுத்து வழங்குகிறார். இதில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, ‘ஒரு முறை விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். விபத்து நடந்ததாக மருத்துவமனை ஊழியர்களிடம் கூறாதே என நண்பர்கள் என்னிடம் சொல்லிவிட்டனர்.

அப்போது என்னை பரிசோதிக்க வந்த நர்ஸ், ஹாட்டாக இருந்தார். அதனால் அவரிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன்’ என்றார். நர்ஸ் ஒருவரை பற்றி பாலகிருஷ்ணா பயன்படுத்திய இந்த வர்ணனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர்கள் அமைப்பினர் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்த பாலகிருஷ்ணா, ‘நான் சொன்ன கருத்து திரித்து பரப்பியுள்ளனர். செவிலியர்கள் உன்னதமான சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள். அவர்களை நான் தவறாக எப்போதும் நினைத்ததில்லை. எனது மருத்துவமனையிலும் செவிலியர்களை மரியாதையாக நடத்துகிறேன். எனது பேச்சு பிறர் மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார்.

Related Stories: