சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ பேட்டி

மதுரை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கடந்த 17-ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதில், விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது.

அதில், வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதி ஆவதற்கு தகுதியற்றவர். அவரை அறிவித்தது எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. எனவே அவரை நீதிபதியாக அறிவித்தவுடன் நாங்களும், காங்கிரஸ் கட்சியினரும் ஜனாதிபதிக்கும், தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினோம் எனவும் கூறிஉள்ளார்.

Related Stories: