நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்.11ல் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பிப்.11ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி நீதிபதிகள் ஆதிக்கமா?; தகுதி இருந்தும் ஒதுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய கி.வீரமணி, அரசமைப்புச் சட்டம் சமூகநீதியை வற்புறுத்தினாலும், சமூக அநீதியே தலைவிரித்தாடுகிறது என்று கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூக அநீதியே பெரிதும் கோலோச்சுகிறது. மிக சக்தி வாய்ந்த நீதி பரிபாலனத்தின் நியமனங்களில் சமூகநீதி பெரிந்து காணாமல் போய்க் கொண்டே இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் 28 நீதிபதிகள் உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மை சமூகங்களில் தகுதிமிக்க மூத்த நீதிபதிகள் இருந்தும் நியமிப்பது இல்லை. கொலீஜியமும், ஒன்றிய அரசும் முரண்பாடாக இருந்தாலும், சமூக நீதி புறக்கணிப்பில் ஒத்த கருத்தோடு இருக்கிறது. இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: