புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு

புதுக்கோட்டை: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 10வது மாநில 3 நாள் மாநாடு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளில் புகைப்பட கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இன்று 2வது நாள் பிரதிநிதிகள் மாநாட்டில் சங்க கொடியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து மாநில தலைவர் சண்முகம் பேசினார். இதைதொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாநாட்டில் பங்கேற்ற விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஏ.லாசர் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 1 கோடி விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பிரச்னைகள் நீடித்து கொண்டே இருக்கின்றன.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.4 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். ஆனால் தற்போது பட்ஜெட்டில் வெறும் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 30 நாட்கள் கூட வேலை கொடுக்கப்படுவதில்லை. இந்தியா முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது. கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கும் நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு தீவிரமாக இருப்பதால் இவர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் உழைப்பாளிகளை திரட்டுவது தான் எங்களது அடிப்படையான நோக்கமாகும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சட்டமாக்கினாலும் அதை நிர்வகிக்கிற கட்டமைப்பு உருவாக்கப்படாமல் மாநில அரசின் கையில் ஒப்படைத்து விட்டனர் என்றார்.

Related Stories: