அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36). மின்னல் கிராம விஏஓ. இவருக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்த முகமது இலியாஸ் திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆன்லைன் பட்டா மூலம் வேறு ஒருவருக்கு இவர் மாற்றியதாக கூறப்படுகிறது. இதுபற்றி நிலத்தின் உரிமையாளர் அரக்கோணம் ஆர்டிஓவிடம் புகார் அளித்துள்ளாராம். இதனால் மனவேதனையில் இருந்தவர் தற்கொலைக்கு முயன்றாரா என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: