மைதானத்தில் இருந்த கார் எரிந்தது

தாம்பரம்: மேற்கு தாம்பரம் - முடிச்சூர் சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென நேற்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அங்கு சென்ற, எரிந்து கொண்டிருந்த தீயை சில மணி நேரம் போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக இருந்து நாசமானது. மேலும், இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த கார் யாருடையது, எதற்காக நீண்ட நாட்களாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: