தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மிகவும் மோசமாக மக்களுடைய வாழ்வு நிலையை பாதிக்க கூடியது.முழுக்க முழுக்க பெரும் முதலாளிகளையும் பணக்காரர்களையும் வாழவைக்கும் ஒரு பட்ஜெட்டாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பட்ஜெட்டாகவே உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன.

இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த பட்ஜெட்டிலாவது ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம்; ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட் தமிழகத்தை புறக்கணிக்கும் பட்ஜெட் ஆகவும் தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட் ஆகவும் உள்ளது. தமிழக மக்கள் மோடி அரசுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள். அதிமுக கூட்டணி ஒரு கூட்டணியே இல்லை. அதிமுக கட்சிக்கு இனிமேல் எதிர்காலம் இல்லை என்றார்.

Related Stories: