ஆயுதங்களுடன் மோதி கொண்ட விவகாரம்: வீடியோ பதிவு மூலம் மேலும் 3 மாணவர்கள் கைது

சென்னை:  சென்னை மெரினா காமராஜர் சாலையில் மாநில கல்லூரி அருகே 2 மாணவர்கள் குழு ரூட் தல பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் கடந்த 31ம் தேதி மோதிக்கொண்டனர். புகாரின் படி, போலீசார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக 3 மாணவர்களை கைது செய்தனர்.

மேலும், வீடியோ ஆதாரங்களின் படி கல்லூரி மாணவர்களான கவியரசு (22), வெங்கடேசன் (20), சஞ்சய் (20) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாணவர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: