ரயில்வேக்கு 73 சதவீத வருவாய் வளர்ச்சி

புதுடெல்லி:  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி  வரை இந்திய ரயில்வேயின் பயணிகள் பிரிவில் மொத்த வருவாய் ரூ.54,733 கோடி.   கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில்  ரூ.31,634 கோடி வருவாய் வந்தது. இந்த ஆண்டு 73 சதவீதம் அதிகமாகும்.   முன்பதிவு செய்த பயணிகளிடம் இருந்து ஈட்டிய வருவாய் ரூ. 42,945 கோடி.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 29,079 கோடி. இது 48 சதவீதம் அதிகம். முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில்  இருந்து கிடைத்த வருவாய் ரூ.11,788 கோடி. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.2,555 கோடியாக இருந்தது.

Related Stories: