படிப்படியாக வரி விலக்குகள் ரத்து: வருவாய்த்துறை செயலாளர் பேட்டி

புதுடெல்லி:   ஒன்றிய அரசின் வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: ஆண்டுக்கு ₹15 லட்சம் ஈட்டும் தனிநபர், பழைய வரி விதிப்பு முறையில் குறைந்த பட்சம் ₹3.75 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும். இவர்களுக்கு தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி முறை அதிக பலன் வழங்குவதாக அமையும். புதிய வரி விதிப்பு முறையை கட்டாயமாக்க குறிப்பிட்ட கால அளவு எதையும் அரசு நிர்ணயிக்கவில்லை.

இருப்பினும், வரி விகிதங்களை குறைப்பதன் மூலம், படிப்படியாக வரி விலக்கு இல்லாத நிலையை ஏற்படுத்த ஒன்றிய அரசு விரும்புகிறது. புதிய அறிவிப்பின்படி ₹7 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதோடு நிரந்தர கழிவாக ₹50,000 சேர்வதால், ₹7.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டாம் என்றார்.

Related Stories: