விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஷ்மீர் பறந்தார் திரிஷா

சென்னை: விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா, படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு சென்றார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிவிட்டது. இந்த படத்தை லலித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, காஷ்மீரில் தொடங்க உள்ளது. இதற்காக விஜய், திரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் படக்குழுவினர் காஷ்மீருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மலையாள நடிகர் நிவின் பாலியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கேங்ஸ்டர் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: