தோட்டக்கலை பயிர்களுக்கு தெளிக்க இயற்கை முறை கரைசல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

*வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பங்கேற்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை முறையில் கரைசல்  குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திருப்பத்தூர் மாவட்டம்  சோமநாயக்கன்பட்டி  கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதில் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை முறையில் கரைசல் தயாரித்து அவற்றை காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தும் விதம் குறித்தும் பாதுகாப்பு மற்றும் மகசூல் குறித்தும் செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினர். இதில் கல்லூரி மாணவி கருவேல மரப்பட்டை கரைசல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காட்டி இதன் மூலம் பாரம்பரிய அந்தகாலத்தில் மக்கள் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். காய்கறிப்பயிர்களில் வைரஸ் நோய் உள்ளிட்ட பூச்சி, புழுக்கள் கட்டுப்பாட்டிற்கு இயற்கை வழித்தீர்வாக இந்த கரைசலை பயன்படுத்தலாம் என  விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்தார்.மேலும் இது இராசயன உரத்தில் இருந்து மண்ணை பாதுகாக்கும் எனவும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: