சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 3 நாட்கள் நடக்கும் ஜி-20 கல்வி கருத்தரங்கம் தொடங்கியது: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு..!!

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு தொடங்கியது. ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 2ம் தேதி வரை நடக்கும் கருத்தரங்கில் ஜி-20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். ஜி -20 மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. அதேவேளையில் இந்த மாநாட்டிற்கு முன்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி என்று பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு துறைசார்ந்த அமைச்சர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்தந்த நாடுகளில் உள்ள சிறப்பான அம்சங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் இன்று ஜி-20 கருத்தரங்கு தொடங்கியது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தொடங்கியுள்ள இந்த கருத்தரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள விருந்தினர்கள் பல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் முழு போலீஸ் பாதுகாப்புடன் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். வரக்கூடிய வெளிநாட்டவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு தொடங்க கூடிய இந்த கருத்தரங்கு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் 29 நாடுகள், 15 பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான இன்று ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

Related Stories: