எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம்: பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: ஆக்கப்பூர்வமான செய்திகளுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது மிகப்பெரிய கவுரவம். பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் உரையை நிகழ்த்துவது நாட்டுக்கே பெருமை. நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும். எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம். அவை நடவடிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: