மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!

மதுரை: மதுரையில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் பகுதியில் பாண்டியர்களை தேடி பயணக்குழுவை சேர்ந்த கட்டடக்கலை ஆய்வாளர்கள் தேவி, மணிகண்டன் குழுவினர் கள ஆய்வு செய்தனர். இதில் ஒரே பலகை கல்லில் அமைந்த 4 நடுகற்கள் மற்றும் ஒரு சூலகல் கண்டறியப்பட்டன. இவற்றின் காலம் 16ம் நூற்றாண்டாக இருக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.

அதில் பெருமாள் கோவில் வாசலில் உள்ள நடுகற்களில் உள்ள பெண் சிற்பங்களில் எலுமிச்சை பழம் பிடித்த மாதிரியாகவும் இடது கையில் கண்ணாடியை பிடித்தும் காட்டியிருப்பது. வீரர் இறக்கும் பொது உடன்கட்டை ஏறியவர்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக சிற்பம் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு நடுக்கல்லில் ஆண் வீரரின் உருவத்தில் தொப்பை காட்டப்பட்டுள்ளது. இனொரு ஆண், பெண் நடுகல் சிற்பங்களானவை நின்றநிலையில் காட்டப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்கள் இந்த நடுகற்களை வேடன், வேடச்சி என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.

Related Stories: