செம்பருத்தி... செம்பருத்தி...

நன்றி குங்குமம் டாக்டர்

செம்பருத்தி அல்லது செவ்வரத்தை பூ என அழைக்கப்படும் இத்தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. எனவே இதை மூலிகை ரோஜா என்றே அழைக்கலாம். இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. செம்மை நிறத்தில் இதன் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர் பெற்றது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

*செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். செம்பருத்திப்பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது.

*உடற்சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 5 அல்லது 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

*செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.

*செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

*ரத்தம் விருத்தி ஆவதற்கும், உடலின் பலத்திற்கும் இரும்புச்சத்து மிகவும் அவசியமாக இருக்கிறது. செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிப்பதோடு, ரத்த சோகை நோய் குறையும்.

*செம்பருத்தி பூவில் நச்சுக்களை அழிக்கும் வேதி பொருட்கள் அதிகம் உள்ளது. தினமும் காலையில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்றாக மென்று சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் நீங்க பெற்று ரத்தம் சுத்தமாகி, உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.

*பெண்களாக பிறந்த அனைவரும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒரு பிரச்னையாக மாதவிடாய் பிரச்னை இருக்கிறது. செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும், அப்பூவை நீரில் வேகவைத்து, வடிகட்டி அருந்துவதாலும் பிரச்சனைகள், கருப்பை கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

*செம்பருத்திப்பூக்களை சிகைக்காய்ப் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும்.

*ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும். கோடை காலங்களில் நீர் சுருக்கு ஏற்படுவதாலும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உண்டாகும். செம்பருத்தி பூ இதழின் சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும்.

*வயது வந்தும் பருவம் அடையாதவர்களுக்கு, நெய்யில் பூக்களை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள், கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

*கொழுப்பின் அளவினை குறைப்பதில் சக்தி வாய்ந்தது. தமனிகளின் அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை குறைக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பயன்படுத்த வேண்டும்.                   

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்

செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர். காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம். செம்பருத்தி இப்பொழுது Hibiscus ஹெர்பல் டீ எனவும் கிடைக்கிறது. இதில் Caffaine இல்லாததால் இதை ஒரு சிறந்த ஹெர்பல் டீ ஆக பருகலாம். இதில் Antioxidant polyphenols இருப்பதால் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும். மேலும் Saponins இருப்பதால் நாம் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கிறது. இதனால் உடல் பருமனைக் குறைக்க உதவும்.

Related Stories: