நடைபயணத்தில் திடீர் மாரடைப்பு தெலுங்கு நடிகர் கவலைக்கிடம்

அமராவதி: ஆந்திரா வில் நடைபயணத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெலுங்கு நடிகர் நந்தமூரி தாரக ரத்னாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தலைமையிலான ஆதரவாளர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நடைபயணத்தில் தெலுங்கு நடிகர் நந்தமூரி தாரக ரத்னா பங்கேற்றார். அப்போது திடீரென்று அவர் தடுமாறி கீழே விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடி யாக நாராயணா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாக் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நந்தமூரி தாரக ரத்னாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. நந்தமூரி தாரக ரத்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: