குட்டையில் மூழ்கி8 வயது மாணவன் பலி

சுரேந்திரநகர்: குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் தாமா கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. அந்தப் பள்ளியில் படித்து வந்த எட்டு வயது மாணவன் குல்தீப் முன்ஜ்பரா, வகுப்பு முடிந்தவுடன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று தேடினர். அப்போது பள்ளிக்கு வெளியே உள்ள குட்டையில் குல்தீப் முஞ்ச்பராவின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த ஜின்சுவாடா போலீசார், குட்டையில் மூழ்கியிருந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தோண்டப்பட்ட குட்டையில், தண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த குட்டையில் சிறுவன் இறங்கியுள்ளான். எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளான். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: