மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில் ரயிலில் அடிபட்டு சிறுத்தை பலி

அம்ரோஹா: உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் கைல்சா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை அதிவேக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று ரயில் தண்டவாளத்தில் சென்றது. எதிர்பாராதவிதமாக ரயில் மோதியதில், தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சிறுத்தை பலியானது.

இதனை பார்த்த அப்பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விபத்தில் பலியான சிறுத்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், மக்கள் மத்தியில் பீதி நிலவியது.

இந்த நிலையில் சிறுத்தை ஒன்று ரயிலில் அடிபட்டு பலியானதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முன்னதாக ஜார்கண்ட் மாநிலம் கர்வா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் நான்கு பேரின் உயிரைப் பறித்த சிறுத்தையை கொல்ல அம்மாநில வனத்துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நிலையில், உத்தரபிரதேசத்தில் சிறுத்தை ஒன்று ரயிலில் அடிபட்டு பலியானதால் அம்மாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: