சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோபால்பட்டி: சாணார்பட்டி பகுதியில் மாமரங்களில் மாம்பூக்கள் அதிகம் பூத்துள்ளதால் இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சிஓடைபட்டி, ஐயாபட்டி, கொரசனம்பட்டி, மணியக்காரன்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக்கனிகளில் ஒன்றான மாங்கனி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  

இங்கு உயர்ந்த வகை மாம்பழங்களான இமாம் பசந்த் அல்போன்சா, பங்கனப்பள்ளி போன்ற ரகங்களும் கிரேப், செந்தூரம் போன்ற ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்பட்டு மாம்பழங்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன, இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் நல்ல வெயிலும் அடித்து வருகிறது. இதனால் மாமரங்களில் மாம்பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. மாம்பூக்கள் அதிகம் பூத்துள்ளதால் இந்த ஆண்டு, சென்ற ஆண்டை காட்டிலும் அதிகளவு மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Related Stories: