மகன்கள் கண்டித்ததால் போதைக்கு அடிமையான தாய் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சிவசக்தி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் காத்தாயி (38). இவரது கணவர் முனுசாமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர், திருவண்ணாமலையில் தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார். காத்தாயி தனது மூத்த மகன் தர்மதுரை (17), இளைய மகன் தங்கதுரை (13) ஆகிய 2 பேருடன் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை செய்து வரும் காத்தாயி மது பழக்கத்திற்கு ஆளாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மகன்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதால், தங்களுக்கு அவமானமாக உள்ளது, என மகன்கள் கண்டித்துள்ளனர்.

இதனால், விரக்தியில் இருந்த காத்தாயி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகன்கள், தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். தகவலறிந்த ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காத்தாயி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: