சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மொழி காவலர்களின் திருவுருவ படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாள் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது வருகிறது. இதனடிப்படையில் இன்று சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்திற்குள் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  

இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர், மக்கள் பிரதிநிதிகள் போன்ற ஏராளமானோர் பங்கேற்றனர்.

1960-ல்  இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக இளைஞர்கள் தன்னெழுச்சியாகவும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஏராளமான போராட்டங்கள் மாநிலங்கள் முழுவதும் நடைபெற்றன. மிக தீவிரமாக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களால் ஏராளமானோர் உயிரிழந்த நிகழ்வுகளும் நடைபெற்றன.

இவ்வாறாக தமிழ்மொழி காக்க இன்னுயிர் நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகளாக அனுசரிக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்தவகையில் மொழிப்போர் தியாகிகள் நினைவை போற்றும் வகையிலும், மரியாதை செலுத்தக்கூடிய வகையிலும் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

Related Stories: