முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29ம் தேதி காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய அரசின் 2023-24ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பொருள் குறித்து கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 1ம் தேதி தொடங்க உள்ளது. 2ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து நிதி நிலை அறிக்கை விவாதம் நடைபெறும். இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். மக்களவை, மாநிலங்களவையில் தமிழக மக்களுக்கு தேவையான என்னென்ன விஷயங்களை முன்னெடுத்து பேச வேண்டும். என்னென்ன திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவது குறித்து பேச உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்பிக்களுக்கு வழங்குவார் என்று தெரிகிறது.

Related Stories: