இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு தொடங்கியது..!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். மொத்தமுள்ள 238 பூத்துகளில் 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் 5% இயந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் ஈரோடு - கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா ஜனவரி 4-ம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டது.

ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பிற ஆறு தொகுதிகளுக்கான தேர்தல் அரசாணை ஜனவரி 31ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 7-ம் தேதி முடிவடைந்து பிப்ரவரி 8-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். இந்த இடைத்தேர்தல்களில் வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாள் பிப்ரவரி 10-ம் தேதி என தேர்தல் ஆணைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று பின்னர் மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்ர்கும் பணி தொடங்கியது. ரேண்டம் முறையில் 25 இயந்திரங்களில் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

Related Stories: