பொது, சமுதாய கழிப்பறைகள் குறித்த சர்வேயில் நீங்களும் பங்கேற்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள பொது மற்றும் சமுதாய கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அக்கழிப்பறைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஒவ்வொரு கழிப்பறைக்கும் QR Code உருவாக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட கழிப்பறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. கழிப்பறை அமைந்துள்ள இடம் மற்றும் முகவரி. அலைபேசி எண் பதிவு செய்யும் முறை. தண்ணீர் வசதி முறையாக உள்ளதா (ஆம்/இல்லை), கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா(ஆம்/இல்லை), கழிப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளதா (ஆம்/இல்லை), தனிப்பட்ட கருத்து பதிவு செய்யும் முறை, QR Code விவரம் அடங்கிய சிறு அட்டை, அனைத்து பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் பொருத்தப்படவேண்டும் என திட்டமிடப்பட்டதன் முன்னோடியாக, இதுவரை 7,954 கழிப்பறைகளில் QR Code பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,715 கழிப்பறைகளில் QR Code பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கழிப்பறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், கழிப்பறைகளில் உள்ள வசதிகளின் நிலை மற்றும் குறைபாடுகள் குறித்து தங்களது கைப்பேசியில் QR Code-ஐ ஸ்கேன் செய்து கருத்துக்களை பதிவு செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: