இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் 21 பெயரிடப்படாத தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீபத்தில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசிய நினைவிடத்தின் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இன்று, பராக்ரம் திவாஸ் அன்று, நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்துகிறேன், மேலும் இந்திய வரலாற்றில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை நினைவு கூறுகிறேன். காலனித்துவ ஆட்சிக்கு அவரது கடுமையான எதிர்ப்பிற்காக அவர் நினைவுகூறப்படுவார். அவரது எண்ணங்களால் ஆழமாக தாக்கம் செலுத்தப்பட்டு, அவரது பார்வையை நினைவாக நாங்கள் உழைக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முதன்முதலாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட பூமி இந்த அந்தமான் நிலம். சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. இன்று நேதாஜி சுபாஷ் போஸின் பிறந்தநாள். இந்த நாளை பராக்கிரம் திவாஸ் என நாடு கொண்டாடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வீர் சாவர்க்கரும், நாட்டுக்காகப் போராடிய பல மாவீரர்களும் இந்த அந்தமான் மண்ணில் அடைக்கப்பட்டனர். 4-5 ஆண்டுகளுக்கு முன்பு நான் போர்ட் பிளேயருக்குச் சென்றபோது, ​​அங்குள்ள 3 முக்கிய தீவுகளுக்கு இந்தியப் பெயர்களை அர்ப்பணித்தேன். இன்று புதிய பெயர்கள் பெற்றுள்ள 21 தீவுகளின் பெயர்களில் பல செய்திகள் அடங்கியுள்ளன. செய்தி ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்; இந்த செய்தி நமது ஆயுதப்படைகளின் துணிச்சலானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அந்தமான் நிக்கோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதுபெற்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. அளவில் மிகப்பெரிய தீவுக்கு பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடி பெயர் சூட்டினார். காணொளி காட்சி மூலம் நரேந்திர மோடி பெயர் சூட்டினார். சோம்நாத் தீவு, மனோஜ் பாண்டே தீவு, சேத்ரபால் தீவு, சஞ்சய் தீவு உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டது. சைத்தான்சிங், அப்துல்அமீது, ஹர்தேஷிர் பர்சோர்ஜி உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. 

Related Stories: