கீழடி அகழாய்வு பொருட்கள் மூலம் தமிழர் நாகரிகம் வெளிப்பாடு: தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

திருவண்ணாமலை: அடுத்த ஆறு மாதக் காலத்திற்குள் கீழடி அருங்காட்சியகத்தை மயன் மாளிகை அருங்காட்சியமாக உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் அருணை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அறிஞர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டி கௌரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்கள் அனைத்தும் தமிழர்களுக்கு என தனி நாகரிகம் இருந்ததை அடையாளப்படுத்துகிறது என கூறினார். 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத படிக்க தெரிந்த தமிழினம் இருந்தது என்பதை உணர்த்துவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பாரத நாட்டியம், கிராமியப்பாடல், பட்டிமன்றம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகலும் நடைபெற்றன.

Related Stories: