கடலோர பாதுகாப்பு பயிற்சி வகுப்புக்கு மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு

சென்னை: கடலோர பாதுகாப்பு பயிற்சி வகுப்பு பிப்ரவரில் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்களின் வாரிசுகளுக்கு இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக், மாலுமி பணி, இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், 2-வது அணிக்கான பயிற்சி வகுப்பு வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இந்த 90 நாட்கள் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மீனவ வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.  மேலும், 3 மாதம் தலா ரூ.1000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: