உடுமலை: கணியூர் பேரூராட்சியின் நுழைவு வாயிலிலேயே மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதன் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. மேலும், தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலில் இருந்தும் சரிவர கடைபிடிக்கவில்லை. இதனால் குப்பைகளை மக்கள் சாலையோரம் வீசி செல்கின்றனர். இவை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. பிளாஸ்டிக் கழிவுளை ஆடு, மாடுகள் தின்றுவிடுகின்றன.
