ஜி20 மாநாடு எதிரொலி மாமல்லபுரத்தில் சுற்றுலா துறை இயக்குனர் ஆய்வு: சாலையோர கடைகள் அகற்றம்

சென்னை: இந்தியா தற்போது, 2023ம் ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இதையடுத்து, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம், புதுச்சேரி, கொச்சின், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜி20 மாநாடு நடக்க உள்ளது. இதில், சென்னையில் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2ம் தேதி  ஆகிய இரண்டு நாட்களில் மாநாடு நடக்க உள்ளது.  மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகள் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரம் வர உள்ளனர்.

இந்நிலையில், 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து வருவது, ஐந்து ரதம் பகுதியில் வரவேற்பது, புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்த பிறகு அழைத்து செல்வது, வாகனங்களை நிறுத்துவது, கைவினை பொருட்களின் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து, சுற்றுலா இயக்குனர் சந்தீப் நந்தூரி பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். அதன்படி அது அகற்றப்பட்டது.

Related Stories: